தேசிய புகையிலை தடுப்புத் திட்டத்தின் கீழ் மூன்று பணியிடங்கள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அலுவலகத்தில் தேசிய புகையிலை தடுப்புத் திட்டத்தின் கீழ் மூன்று பணியிடங்களும் மற்றும் மாவட்ட தர
ஆலோசகர் ஒரு பணியிடம் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்காணும் விவரங்களின் படி தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 02.09.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.
உளவியலாளர் ((Psychologist)) : ஒரு பணியிடத்திற்கு உளவியல்/சமூக சேவகர் துறையில் முதுகலை பட்டம்/உளவியல் பட்டம்/ஆலோசனை தொடர்பான பயிற்சியில் 2 வருட முன் அனுபவத்துடன் களப்பணி ஆற்றியிருக்க வேண்டும். 01.08.2021 ஆம் தேதியில் 35
வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 13 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
சமூக ஆர்வலர் ((Social Worker)) : ஒரு பணியிடத்திற்கு சமூகவியல்/சமூக சேவகர் துறையில் முதுகலை பட்டம்/சமூகவியல் பட்டதாரி 2 வருட களப்பணி ஆற்றியிருக்க வேண்டும். 01.08.2021 ஆம் தேதியில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 13 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) : ஒரு பணியிடத்திற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து கணிணி படிப்புடன் குறைந்தது 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 01.08.2021 ஆம் தேதியில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant) : ஒரு பணியிடத்திற்கு பல் மருத்துவம்/ஆயுர்வேத படிப்பு/செவிலியர்/சமூக அறிவியல்ஃ வாழ்வியல் துறையில் பட்டதாரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம்/பொது சுகாதாரம்/சுகாதார நிர்வாகம்/சுகாதார மேலாண்மையில் முதுகலை பட்டம் (முழு நேரம் அதற்கு இணையாக) மருத்துவமனை
நிர்வாகத்தில் இரண்டு வருட முன் அனுபவத்துடன் விரும்பத்தக்க
பயிற்சி/என்.ஏ.பி.ஹெச்/அய்.எஸ்.ஓ 9001:2008/சிக்மா/லீன்/கைசன் துறையில் அனுபவம் இருப்பின் முன்னுரிமை/சுகாதாரத் துறையில் முந்தைய பணி அனுபவம் கூடுதல் நன்மையாக இருக்கும். 01.08.2021 ஆம் தேதியில் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் ((Undertaking)) அளிக்க வேண்டும். இப்பணிகளுக்கான விண்ணப்பங்களை துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், டி.வி.எஸ்.டோல்கேட், ஜமால் முகமது கல்லூரி அஞ்சல், திருச்சிராப்பள்ளி -
620020. தொலைபேசி எண்.0431-233112, மின்னஞ்சல் முகவரி: dphtry@nic.in என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவுத்தபால் ((Speed Post)) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்கள் திருச்சிராப்பள்ளி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn