காவல் துறையில் இளநிலை செய்தியாளர் பணி

காவல் துறையில் இளநிலை செய்தியாளர் பணி

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : Junior Reporter

காலியிடங்கள் : 54

சம்பளம் : மாதம் ரூ.36,200 – 1,14,800

வயதுவரம்பு : 1.7.2023 தேதியின்படி பொதுப்பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பிசி, பிசிஎம், எம்பிசி, டிசி பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி : தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேரச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசால் நடத்தப்படும் ஆங்கில தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் தமிழில் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : தமிழ்மொழி திறனை LX வகையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர், எழுத்துத்தேர்வு மற்றும் இதர விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.eservices.tnpolice.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 15.4.2024.

ஆல் தி பெஸ்ட் விண்ணப்பதாரர்களே !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision