திருச்சியில் நடைபெற்ற பாரம்பரிய இயற்கை விதைகள், உணவுப்பொருட்கள் கண்காட்சி

திருச்சியில் நடைபெற்ற பாரம்பரிய இயற்கை விதைகள், உணவுப்பொருட்கள் கண்காட்சி

நஞ்சில்லாத உணவு மற்றும் பாரம்பரிய உணவுப்பொருட்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவை நனவாக்கிடும் வகையில் இளைய சமூகத்தினர் பலர் பெற்றோர்கள் காலத்தில் பயன்படுத்தி உடல்நலம் பேணிய பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளவும் இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே இளைஞர்கள் மற்றும நகர்புற மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் நஞ்சில்லா உணவுப்பொருட்களை தாமே தயார் செய்திட வழிவகை செய்யும் வகையில் 'தைப்பட்டம் தாய்விதை' என்ற பாரம்பரிய இயற்கை விதைகள் மற்றும் உணவுப்பொருட்கள் கண்காட்சி இன்று திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தனியார் அரங்கில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

இதில் இயற்கை விதைகள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல்வேறு உணவு வகைகள், அரிசி, பயறுவகைகள் மற்றும் இயற்கை சார் தயாரிக்கப்பட்ட ஆடைகள், எண்ணெய் வகைகள் என பலவகையானவை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை, ஏராளமானோர் பார்வையிட்டு அதனை பயன்படுத்தும் வழிமுறைகளை கேட்டறிந்து ஆர்வமுடன் வாங்கிச் சென்று வருகின்றனர்.

பாரம்பரியத்திற்கு தங்களை மாற்றிக்கொள்ளும் தற்போதைய இளைய தலைமுறையினருக்கும், பாரம்பரிய உணவு, விதைகளை பயிரிட விரும்பு மக்களுக்கும் விளக்கமளித்து அவர்கள் பயிரிட்டு உணவுப்பொருட்களை உற்பத்தி செய்திட இதுபோன்ற பாரம்பரிய விதைகள், உணவுபொருட்கள் கண்காட்சி உதவும்வகையில் உள்ளதாக இளைய தலைமுறையினர் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr