அதிநவீன மருத்துவ கருவிகளின் உதவியோடு இருதயம் சார்ந்த சிகிச்சைகள் மிகச்சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது

அதிநவீன மருத்துவ கருவிகளின் உதவியோடு இருதயம் சார்ந்த சிகிச்சைகள் மிகச்சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் சிறப்பான உயர்தர மருத்துவசிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இருதய சிகிச்சை பிரிவின் நவீனமுறை சிகிச்சை குறித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை முதல்வர் வனிதா செய்தியாளர்களை சந்தித்தார்... திருச்சி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் சிறப்பாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

24மணி நேரமும் இருதய சிகிச்சை பிரிவில் பொதுமக்களுக்கு சேவையை மருத்துவர்கள் மற்றும் மருத்துவதுறை பேராசிரியர்கள் தங்குதடையின்றி வழங்கி வருகின்றனர். மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படும் போது இருதயத்தில் அடைப்பு அல்லது சுருக்கம் ஏற்படும், அதுபோன்ற நேரங்களில் உடனடியாக பொதுமக்கள் அரசு மருத்துவமனை நாடும் போது இரண்டு விதமான சிகிச்சை முறைகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவமனைக்கு இருதய சிகிச்சைக்காக புதிதாக இரண்டு நவீன கருவிகளை வாங்கியுள்ளோம். இந்த இரண்டு முறையான சிகிச்சையின் வாயிலாக மாரடைப்பு பிரச்சனையால் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அடைப்பு குறித்த தன்மை ஆய்வுசெய்யப்பட்டு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த அதிநவீன கருவியின் மூலம் இதுவரை 7 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் எடுத்துக்கொண்டால் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை பணம் செலவாகும். ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் இலவசமாக பொதுமக்களுக்கு இந்த சேவையை செய்துவருகிறோம். இந்த புதிய கருவிகள் மூலம் இருதயத்தில் எந்த இடத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதனை ஆராய்ந்து இரத்த ஓட்டத்தை எப்படி சீர்செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டு சுலபமாக கையாள முடியும்.

மேலும் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாகவும், சூப்பர்ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள 400 படுக்கையினை கொரோனா சிகிச்சை அளிக்கவும், குழந்தைகளுக்கான பிரத்யேகமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கை வசதியுடன் தயார்நிலையில் உள்ளது. 3வது அலையின் போது சிகிச்சைக்காக 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என்றார். ஆக்சிஜன் பற்றாற்குறையைப் போக்க மத்திய அரசின் மூலம் நிமிடத்தில் ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யும் வகையில் இயந்திரம் நிறுவப்படவுள்ளதுடன், ஆகஸ்ட்15ல் பிரதமரால் திறக்கப்படவுள்ளது.

நிமிடத்திற்கு 330லிட்டர் உற்பத்தி செய்யும் பிளாண்ட் பயன்பாட்டில் உள்ளதாகவும், 3வது பிளாண்ட் விரைவில் பயன்பாட்டிற்குவரும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில் தயார்நிலையில் உள்ளதாகவும், ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளதாகவும், தங்குதடையின்றி மருந்துகள் அரசால் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வெண்டிலேட்டர் தட்டுப்பாடு மருத்துவமனையில் இல்லை.

கொரோனா பணிக்கா தற்காலிக மருத்துவர்கள் 70 பேர், 77 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, கூட்டங்களை தவிர்க்க வேண்டும், தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பு ஏற்படுவதில்லை. எனவே 2 டோஸ் செலுத்திக்கொள்ள முடியாவிட்டாலும் 1 டோஸ் செலுத்தினாலே 3வது அலையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் ராஜ் மற்றும் இருதய சிகிச்சை துறை பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr