வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவானது நிறைவுற்றதை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையானது வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை பணிக்காக வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் 102 நபர்கள், உதவியாளர்கள் 102 நபர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் 102 நபர்கள் என மொத்தம் 306 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு (22.05.2024) அன்று இந்திய தேர்தல் ஆணைய மென்பொருள் மூலம் முதல் கட்டமாக சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேற்படி 31 திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்டமாக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு மேற்பார்வையாளர்கள் 102 நபர்கள், உதவியாளர்கள் 102 நபர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் 102 நபர்கள்) பயிற்சி வகுப்பானது திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (23.05.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
மேற்கண்ட நபர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு மற்றும் மேலாண்மை). நெடுஞ்சாலைகள் ஆர்.பாலாஜி பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) என்.சீனிவாசன், அனைத்து சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடந்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision