திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 8 கோடிக்கு மேல் இழப்பு?

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 8 கோடிக்கு மேல் இழப்பு?

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் மீது விவாதங்கள் நடைபெற்றது. அதில் முக்கியமானதாக முதல் கூட்ட அறிக்கை தணிக்கை அறிக்கை ஆண்டு அறிக்கைஆகியவற்றை பிரிண்டிங் நகலாக கொடுக்காமல் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது அது யாரும் பார்க்க முடியாமல் உள்ளது.

இதனால் ஆண்டு பேரவை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என பேரவை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் அடிப்படையில் வரும் கூட்டத்தில் ஆண்டறிக்கை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழக தணிக்கை அறிக்கை நிதி இழப்பு 8 கோடிக்கும் அதிக அளவில் உள்ளது என்றும், 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியின் படிப்பு படிக்கும் மாணவர்கள் மற்ற பல்கலைக்கழகங்களில் இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகள் அதிக அளவில் உள்ளதால் ஆராய்ச்சி மாணவர்கள் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை உள்ளதுப் பற்றி பேரவையில் விவாதிக்கப்பட்டது

தணிக்கை அறிக்கையில் இழப்பு ஏற்பட்டிருப்பது என்பது அது எந்த அளவு ஏற்படுகிறது, எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து கேட்டதற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் உரிய முறையில் பல்கலைக்கழகத்திற்கு உரிய நிதியை கேட்டு பெறவில்லை என்றும் அந்த நிதி வரனும்

இவை அனைத்தும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், மேலும் பாரதிதாசன் பெயர்கொண்ட இந்த பல்கலைக்கழகத்தில் இடங்களிலும் ஆங்கில சொற்களே உள்ளது. ஆகையால் தமிழ் சொற்களும் இடம் பெற வேண்டும் என்று உறுப்பினர்கள் வேண்டுகோள் வைத்தனர் 

இந்த கூட்டத்தில் காரசார விவாதங்கள் ஏற்பட்டதால் மறு கூட்டம் ஒன்று கூட்டப்படும். அதில் அனைத்து தீர்மானங்கள் மீதும் விவாதிக்கப்படும் என்று துணைவேந்தர் செல்வம் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision