நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது - ஆயுதங்கள், கார் பறிமுதல்

நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது - ஆயுதங்கள், கார் பறிமுதல்

கடந்த (19.09.2024)-ம் தேதி நடத்தப்பட்ட "ஆப்ரேசன் அகழி" சோதனையின் போது நில அபகரிப்பு தொடர்பாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த சந்திரமௌலி என்பவரது வீட்டினை சோதனை செய்யும் முன்பே அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே. அவரது செயல்பாடுகள் குறித்து இரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் "ஆப்ரேசன் அகழி" சோதனையினை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 825 போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். (2O.09.2024)-ஆம் தேதி வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு நடுகரை எல்லீஸ் சோதனை சாவடியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த TN 07 AM 4541 Skoda Octavia என்ற காரை நிறுத்த முற்பட்ட போது காரை ஓட்டி வந்த நபர் காரை முக்கொம்பு நடுகரை எல்லீஸ் பூங்காவின் சுவரில் மோதிவிட்டு, காரிலிருந்து 2 நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மேற்படி காரை சோதனை செய்ததில், காரின் உள்ளே அருவாள்-1. இரும்பு வாள்-2. இரும்பு ராடு 1 போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த ஆயுதங்களுடன், காரில் இருந்த ஒரு நபரும் கைது செய்யப்பட்டார். மேற்படி காரில் இருந்த நபரான திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த சந்திரமௌலி என்ற மௌலி (39) என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தவர் எனவும், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி எனவும், காரில் இருந்து தப்பி ஓடிய இரண்டு நபர்களும் நாம் தமிழர் கட்சியினை சார்ந்த நிர்வாகிகள் எனவும் விசாரணையில் தெரிய வருகிறது.

மேற்படி நபரை வாத்தலை காவல் துறையினர் விசாரணை செய்த போது காவல்துறையினரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்யவிடாமல் தடுத்ததால் மேற்படி நபரை கைது செய்து வாத்தலை காவல்நிலைய குற்ற எண் : 127/24 5.. 132, 296(b), 351(ii) BNS r/w 25(a) Arms Act, PPDL Act-ன்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், தப்பி ஓடிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை காவல்துறையின தீவிரமாக தேடி வருகின்றனர்.

"ஆப்ரேசன் அகழி" சோதனைக்காக மூன்று பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, முதல் பட்டியலில் உள்ள நபர்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு பட்டியலில் உள்ள நபர்கள் விரை சோதனை செய்யபடுவார்கள். மேலும், இந்த தேடுதல் வேட்டையின் போது நில அபகரிப்பு தொடர்பான அதிக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ. CCTV ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண்குமார், உதவி எண் : 97874 64651 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision