திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.திருச்சி மாநகர் பீமநகரில் விநாயகர், சங்கிலி ஆண்டவர், மதுரை வீரன், வள்ளி, தேவசேனா, சுப்பிரமணிய சுவாமி மற்றும் அய்யனார் பரிவாரங்களுடன், செடல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலின் ராஜகோபுரம், சன்னதிகள் மற்றும் விமானங்களுக்கான திருப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதன் தொடர்ச்சியாக, கோவிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று (காலை 9:30 மணிக்கு மேல் 10.30 மணி வரை) நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3-ந் தேதி முதல் கோவிலில் பூர்வாங்க பூஜைகள் நடந்தப்பட்டன. 

நேற்று காலை 8 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் நடந்தப்பட்டு, தீபாதாரனை காட்டப்பட்ட பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர் மாலை 5-ம் காலயாக பூஜை நடைபெற்றது. இன்று காலை 6:30 மணிக்கு 6-ம் காலயாக பூஜைகள் நிறைவடைந்த பின்னர், திரவ்யாஹுதி, பூர்ணாஹீதி, யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதன்தொடர்ச்சியாக கோவில் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், மூலவர் மகா கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் மகாபிஷேகம், அம்மன் திருவீதி உலா, மகா கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

https://www.threads.net/@trichy_vision 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn