சிறப்பு பள்ளியை புதுப்பித்த திருச்சி பட்டர்பிளைஸ் ரோட்டரி சங்கம்

சிறப்பு பள்ளியை புதுப்பித்த திருச்சி பட்டர்பிளைஸ் ரோட்டரி சங்கம்

திருச்சி பட்டர்பிளைஸ் ரோட்டரி சங்கம், ரோட்டரி மாவட்டம் 3000 ன் 2024-25ம் ஆண்டுக்கான பப்ளிசிட்டி ஆபிஸ் மீடியா வொட்டி பங்களிப்போடு திருச்சி காட்டூரிலுள்ள ஜெயா சிறப்புப் பள்ளியின் கட்டிடத்தை புதுப்பித்தது. இதில் வண்ணம்பூசி, தேவையான பிற உபகரணங்களையும் வழங்கினார்கள்.

பின்னர் புதுப்பிக்கப்பட்ட அந்த கட்டிடத்தினை ரோட்டரி மாவட்டம் 3000ன் வருங்கால ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி, ரொட்டேரியன் கே.சீனி வாசன், முதல் பெண்மணி ஆஷா ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். முன்னதாக பட்டர்பிளைஸ் சங்க தலைவி சுபா பிரபு வரவேற்றார்.

விழாவில் ரோட்டரி பட்டர்பிளைஸ் சங்க உறுப்பினர்கள் சுபத்ரா, காஞ்சனா, நிஷா- டயமண்ட் சிட்டி ரோட்டரி சங்க பொருளாளர் தேவி மற்றும் ஸ்ரீரங்கம் சங்க செயலாளர் அறிவழகன் மற்றும் பிற சங்கங்களைச் சார்ந்த உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் ரேவதி நிகழ்வினை ஒருங்கிணைத்தார். பட்டர்பிளை சங்க செயலாளர் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision