திருச்சி காவேரி பெண்கள் சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கான இணையவழி நிகழ்ச்சி

திருச்சி காவேரி பெண்கள் சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கான இணையவழி நிகழ்ச்சி

திருச்சி காவேரி பெண்கள்  சுய நிதி கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி GURUDAKSHTA என்ற பெயரில்  வரும் ஜூன் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை  5நாட்கள் இணைய வழியாக நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சி குறித்து கல்லூரியின் முதல்வர் சுஜாதா அவர்கள்  கூறுகையில்,
ஆசிரியர்கள்  ஆய்வு கட்டுரைகளை எழுதுவது, வெளியிடுதல்  குறித்த பல்வேறு தகவல்களை ஆசிரியர்களுக்கு விளக்கம் வண்ணமாக அவர்களுக்கு உதவும் விதமாக இந்த நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்துள்ளோம்.

 எங்கள் கல்லூரியில் உள்ள 225 ஆசிரியர்களும் இதன் மூலம் மிகப் பெரும் பயன் அடைவர். ஆசிரியர்களின் ஆய்வு கட்டுரைகள் எழுதுவதில் உள்ள  நுட்பங்கள் மற்றும்  அதனை வெளியிடுவதற்கான தளங்கள் குறித்து யுஜிசி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அவர்களுடைய ஆய்வுக் கட்டுரைகளில் தரம் மற்றும்  எந்த பத்திரிக்கை தளங்களில் வெளியிட வேண்டும்,  ஆய்வு குறித்த விளக்கக் கட்டுரை எழுதும்பொழுது அவர்கள் பின்பற்ற வேண்டிய நுட்பங்கள் குறித்து   விளங்களை அளிக்க  பல  பல்கலைக்கழக பேராசியர்கள்  எங்கள்  ஆசிரியர்களுக்குரிய சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளோம்.

ஆய்வு கட்டுரைகளை வெளியிடுவதற்கான   நிதி உதவி வழங்கும் அமைப்புகள் பற்றிய விளக்கக் அறிவுரைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காகவும் இந்த இணைய வழி நிகழ்ச்சி பெரிதும் பயன்படும்.
 எப்பொழுதுமே ஆண்டிற்கு ஒருமுறை   கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது எங்கள் கல்லூரியின் வழக்கம்.

இந்த ஆண்டு  ஆசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கட்டுரைகளுக்கு உதவிட   தெளிவுள்ள வகையில் இருக்க வேண்டும் அதுமட்டுமின்றி NAAC மற்றும் NIRFக்கு ஆண்டறிக்கை அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் திறன் பற்றி அனுப்புவதற்கான ஒரு சிறந்ததொரு பங்களிப்பாக இந்நிகழ்வு அமையும் என்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC