திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 6 பிரிவுகளில் 124 பணியிடஙகள்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 6 பிரிவுகளில் 124 பணியிடஙகள்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பு பணிக்கென தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் 6 பிரிவுகளில் 124 பணியிடஙகளுக்கான பணியாளர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவிப்பு.


கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான பணியாளர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
 
1) மருத்துவர்கள் - 57 நபர்கள்

2) செவிலியர்கள் - 55 நபர்கள்

3) Manifold Technician - 2 நபர்

4) Mortuary Attender - 3 நபர்கள்

5) Dialysis Technician - 2  நபர்கள்

6) பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் - 5 நபர்கள்

இப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ள நபர்களில் மருத்துவர்கள் மட்டும் 31.05.2021 காலை 10.00 மணிக்கும் மற்ற இதர பிரிவுகளுக்கு 01.06.2021 அன்று காலை 10.00 மணிக்கும் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடியாக கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இத்தொகுப்பூதிய பணியிடங்களுக்கான ஊதியம் அரசு விதிகளின்படி, வழங்கப்படும்.

நேர்முகத்தேர்விற்கு வரும் பொழுது கீழ்க்கண்ட சான்றிதழ்கள் எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். கல்விச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச்சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல்.

இப்பணியாளர்கள் தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மருத்துவர்கள் மட்டும் 31.05.2021க்குள்ளும், இதர பிரிவினர் 01.06.2021அன்றும் கி.ஆ.பெ.விஸ்வநாதம் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடியாக கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx