எளியோருக்கு ரம்ஜான் சிறப்பு தொகுப்பு வழங்கிய திருச்சி விஷன் அறக்கட்டளை

எளியோருக்கு ரம்ஜான் சிறப்பு தொகுப்பு வழங்கிய திருச்சி விஷன் அறக்கட்டளை.பண்டிகைகளின் மிக முக்கிய நோக்கமே அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதே!
ஏழை எளிய மக்களும் கூடுதல் மகிழ்ச்சியோடு கொண்டாடிட உதவி வருகிறது திருச்சி விஷன் அறக்கட்டளை.திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச ரம்ஜான் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தினக்கூலி பெண்கள் என 50 குடும்பங்களுக்கு ரம்ஜான் பரிசு தொகுப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.
பரிசுத்தொகுப்பில் ஒரு குடும்பத்திற்கு 850 ரூபாய் மதிப்பு உள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி, ஹோலி ரெடிமேர்ஸ் நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இஸ்லாமிய குடும்பங்களை வரவழைத்து பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை மண்டல மேலாளர் ஆர் விஜயராகவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி
ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரம்ஜான் சிறப்பு பரிசு தொகுப்புகளை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார்.மேலும் முனைவர் சக்தி பிரசாத் கலந்து கொண்டு சிறப்பு பரிசு தொகுப்புகளை வழங்கினார். முன்னதாக திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தம் வரவேற்புரையாற்றி நன்றி தெரிவித்தார்.திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு துப்புரவு பணியாளர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பண்டிகை காலங்களில் ஏழை - எளிய மக்களுக்கு அறக்கட்டளை சார்பில் பல நலத்திட்ட உதவிகள் நன்கொடையாளர்களின் உதவியோடு செய்திட திட்டமிடப்பட்டுள்ளோம். தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision