திருச்சிஷாப்.காம் திருச்சி வணிகர்களுக்கான புதிய ஆன்லைன் சந்தை தளம்

திருச்சிஷாப்.காம் திருச்சி வணிகர்களுக்கான புதிய ஆன்லைன் சந்தை தளம்

திருச்சி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வணிகர்களுக்கு உதவும் நோக்கில் திருச்சி ஷாப் (www.trichyshop.com) புதிய ecommerce வலைதளம் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் தங்கள் தொழிலை தொடர்வது பெரிதும் சவாலான ஒன்றாக உள்ளது. 

டிஜிட்டல் யுகத்தின் வளர்ச்சியால் பல வணிக நிறுவனங்கள் இந்த சவாலை எதிர்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் சேவைகளை வழங்க முடிகிறது மற்றும்  வணிகத்தை சீராக இயங்க உதவுகிறது. பல வணிக நிறுவனங்கள் பெரும் முதலீட்டில் தங்களது ஆன்லைன் கட்டமைப்பை உருவாக்க தொடங்கி உள்ளன. ஆனால் சில வணிக நிறுவனங்களுக்கு பெரும் முதலீடு சாத்தியமில்லை.

இதை நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து வணிக நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் trichyshop.com மூலம் மாத கட்டணமாக ரூபாய் 2999 (18%GST) செலுத்தி வணிக நிறுவனங்கள் தங்களுக்கான பிரத்யேக  ஆன்லைன் இ-காமர்ஸ் வலைதளத்தை உருவாக்கி கொள்ளலாம். இதன்மூலம் வணிக நிறுவனங்கள் பிற டெலிவரி நிறுவனங்களை சாராமலும், எவ்வித கமிஷன் கட்டணங்கள் இல்லாமலும், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவை வழங்க முடியும். 

மளிகை, பல்பொருள் அங்காடிகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள், அரிசி வியாபாரம், உணவகங்கள், பேக்கரி, பாட்டில் குடிநீர் டெலிவரி போன்ற மற்றும் பலதரப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றதாக இருப்பதோடு இதன் மூலம் வாடிக்கையாளரை தக்க வைத்து இறுதியில் வருவாயை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த சந்தை தளத்தை 7 நாட்களுக்கு இலவசமாக சோதனை முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC