வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி நிகழ்ச்சி-மழையையும் பொருட்படுத்தாது குவிந்த பக்தர்கள்

வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி நிகழ்ச்சி-மழையையும் பொருட்படுத்தாது குவிந்த பக்தர்கள்

மணப்பாறையில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி நிகழ்ச்சி மழையையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்லும் வேடபரி திருவிழா

இன்று மாலை நடைபெற்றது. காரமேட்டுப்பட்டி, மணப்பாறைபட்டி, எடத்தெரு ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் காட்டு முனியப்பன் கோவிலில் இருந்து பல்வேறு வண்ணக்கொடிகளுடன் படுகளம் ஓடிவந்து மாரியம்மன் கோவிலை அடைந்தவுடன் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மின்னொளியில் ஜொலித்த குதிரை வாகனத்தில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் வேடபரி நிகழ்ச்சி தொடங்கியது.

இளைஞர்கள் குதிரை வாகனத்தை தோளில் சுமந்து வந்தபோது பெய்த மிதமான மழை பெய்த நிலையிலும் பக்தர்களின் ஓம் சக்தி கோசத்துடன் அம்மனை வழிபட்டனர். ஆலயத்தில் இருந்து பறப்பட்ட வேடபரி ராஜவீதி, கோவில்பட்டி சாலை வழியாக திருவீதி உலா சென்று இறுதியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இந்த வேடபரி நிகழ்ச்சியின் போது பல்லாரயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் அடுத்தடுத்து எதிரெதிரே இரண்டு ஆம்புலன்ஸ்சுகள் வந்தது. அப்போது அம்மன் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்டதை அடுத்து ஆம்புலன்ஸ் சென்றது. இது பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. 

இதைத் தொடர்ந்து மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து வந்தனர். தப்பாட்டம் முழங்க அதற்கேற்றவாறு இளைஞர்கள் நடனமாட ஆட்டம், பாட்டம், கொண்டாடத்துடன் அனைவரும் முளைப்பாரி எடுத்து வந்தனர். விழாக்கோலம் பூண்டிருந்த நிகழ்வுகளில் எங்கு திரும்பினும் மக்கள்

தலைகளாகத் தான் காட்சி அளித்தது. திருவிழாவில் பல்லாரயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மன் குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டவுடன் அம்மனை படம் பிடிக்கும் ஆசையில் நூற்றுக்கணக்கானோர் தங்களது மொபைல்

போனில் அம்மனை படம் எடுத்தனர். அதேபோல் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என பலரும் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுழற்றி வீரத்தை வெளிப்படுத்தினர். வேடபரி திருவிழாவில் மழையையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டிருந்தன்ர்.   புதன் கிழமை நடைபெறும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision