மகள் மரணத்தில் சந்தேகம் தாய் தந்தை கலெக்டரிடம் கண்ணீர் மனு
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். ஓய்வு பெற்ற வணிகவரித் துறை அலுவலக ஊழியரான இவர் இன்று தனது மனைவி விஜயலட்சுமி உடன் திருச்சி ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் வந்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளது....
எங்களின் இரண்டாவது மகள் ரம்யா ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிமுத்து மகன் குமரகுருபரனை கடந்த 2010ல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் நாங்கள் வரதட்சணையாக 40 பவுன் தங்க நகைகளை கொடுத்தோம். எங்களின் மகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் குமரகுரு சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே என் மகளின் மாமனார் மாரிமுத்து அடிக்கடி ரம்யாவிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15 9 2021 அன்று எனது மகள் அவரது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தூக்கில் தொங்க போவதாக மாரிமுத்துவிடம் தெரிவித்ததுள்ளார்.. அவர் சுயநினைவு இல்லாத தருணத்தை பயன்படுத்தி பல வெற்றிப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். எங்கள் மகள் ரம்யா தூக்கில் தொங்கும் போது அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார் என்று நாங்கள் தெரிவித்தோம்.
மகளின் செல்போன் எங்கு உள்ளது என்று கேட்டபோதும் போலீஸ் தரப்பில் எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொடுத்த புகாரை அவர் வாங்க மறுத்துவிட்டார். ஆகவே எங்கள் மகளின் சாவுக்கு காரணமான அவரது கணவர் குமரகுரு மாமனார் மாரிமுத்து மற்றும் உறவினர் நாகராஜ் ஆகியோரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரகுருவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மகள் ஏற்கனவே கூறியுள்ளார்.மகள் சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மேலும் குமரகுரு தரப்பினர் எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள் எங்கள் பேரக் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக கருதுகிறோம் என
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn