உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம்

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம்

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சி தினமான 01.11.2022 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள 
வேண்டுமென(மாவட்ட
 ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை குறித்து கிராம ஊராட்சிகளில் முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், ஊராட்சி அளவிளான பெருமைப்படுத்தும் விதமாக கிராம சபைக் கூட்டமைப்புகளை சார்ந்தவர்களை கூட்டத்தில் பாராட்டப்படுதல் கிராம ஊராட்சியில் உள்ள நிநிலைகளை பாதுகாத்து அந்த ஊராட்சியின் வருவாயினை அதிகப்படுத்துநல் தொடர்பாக கிராம ஊராட்சிகள் வளர்ச்சி அடைவதில் இளைஞர்களுக்கும்/குழந்தைகளுக்கும் அதிக பங்கு உள்ளதால் அவர்களை முழு உத்வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல், உள்ளீட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது.

உள்ளாட்சிகள் தினமான 01.11.2022 அன்றுகாலை 11.00 மணிக்கு  திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும்  கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. கிராம ஊராட்சி வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நடைபெறும் இடத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இக்கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சியின் வாக்காளர் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு

ஊராட்சிகளில் கிராம சபை
நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO