வாய்ஸ் அறக்கட்டளை பிள்ளைகளுக்கு புத்தாடை, மிதிவண்டி வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல்
திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனுர் கிராமத்தில் உள்ள வாய்ஸ் அறக்கட்டைக்கு வில்லேஜ் குக்கிங் குழுவினர் சார்பாக குழந்தைகள் அனைவருக்கும் புது ஆடைகள், 4 மிதிவண்டிகள் மற்றும் 10 குழந்தைகளுக்கு ஸ்வெட்டர் ஆகிய அனைத்தும் வழங்கியுள்ளனர்.
பரிசுகளை குழந்தைகளுக்கு வழங்கிய பின்னர் ,இதற்கு காரணமாக இருந்த அனைத்து மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். மற்றும் இந்த இல்லத்தில் படித்து முடித்து வரும் அனைத்து குழந்தைகளுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர முயற்சிக்கின்றோம் என்று கூறினார்கள்.
குழந்தைகளுக்கு என்னென்ன தேவை என்று இல்ல அன்னை ஆரோக்கியமேரி அவர்களிடம் கேட்டப்பொழுது குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல மிதிவண்டி மற்றும் உடுத்த புது உடையும் மற்றும் ஸ்வெட்டர் ஆகியவற்றை தேவை என்று கூறியிருந்தார்.இந்த நிகழ்வை பார்த்து மக்கள் பலரும் வாய்ஸ் அறக்கட்டளையில் உள்ள படித்து முடித்தமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்து கொடுத்திருக்கிறார்கள். இதை கேட்டதும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சையாக உள்ளது. உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறினார்கள்.
அனைது குழந்தைகளுக்கும் பாப்கார்ன்களை வில்லேஜ் குக்கிங் குழுவினர் வழங்கினார்கள். குழந்தைகள் அதை மகிழ்ச்சியோடு சாப்பிட்டார்கள் .பின்னர் அனைத்து குழந்தைகளுக்கு மிதிவண்டி மற்றும் ஸ்வெட்டர் ஆகியவை குக்கிங் குழுவினர்கள் சார்பாக புது ஆடைகள் வழங்கினார்கள். அதனை பெற்றுக்கொண்ட குழந்தைகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்
சென்ற ஆண்டும் குழந்தைகளுக்கு பிரியாணி சமைத்துக்கொடுத்து குழந்தைகளை மகிழ்வித்தனர்.மற்றும் இந்த இல்லத்தில் படித்து முடித்து வரும் அனைத்து குழந்தைகளுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர முயற்சிக்கின்றோம் என்று கூறினார்கள். வாய்ஸ் அறக்கட்டளையின் சார்பாக இல்லத்தில் வளர்ந்த ஐஸ்வர்யா அவர்கள் வில்லேஜ் குக்கிங் குழுவினர்களுக்கு நன்றி கூறினார்.