வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் இரக்கம் காட்டுவாரா? மாநகர காவல் ஆணையர்

வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் இரக்கம் காட்டுவாரா? மாநகர காவல் ஆணையர்

மக்களுடன் முதல்வர் முகாம், காவல்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர்களிடம் கொடுத்த புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை இயக்குநர் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் காமினி பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி, நேற்று (21.02.2024)-ந் தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 21 மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தீர்வு கான அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் 12 பழைய மனுக்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்து உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட "மக்களுடன் முதல்வர்" முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 37 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த 269 மனுக்களில் 81 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டும், மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இம்முகாமில், காவல் துணை ஆணையர் தெற்கு, காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பும் முகாமிற்கு வரக்கூடிய மனுதாரர்கள் சில சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக உறையூர், ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் சேர்ந்த மனுதாரர்கள் யாரேனும் முகாமிற்கு வர வேண்டுமானால், 2 பேருந்து மாறி நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி மத்திய தேர்ந்த நிலையம் பகுதிகளில் இந்த பொதுமக்கள் சிறப்பு முகாம் நடத்தினால் போக்குவரத்து வசதிக்கு ஏதுவாக இருக்கும் பயணம் நேரம் குறையும் என வயதானவர்கள் பெண்களும் மற்றும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision