போராட்டம் வாபஸ் - கோரிக்கைகள் நிறைவேற்றாப்பட விடில் நாளை மீண்டும் போராட்டம்

போராட்டம் வாபஸ் - கோரிக்கைகள் நிறைவேற்றாப்பட விடில் நாளை மீண்டும் போராட்டம்

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் நிலையத்தில் உள்ளது. 500 முகவர்கள் உள்ளனர். ஆவின் பாக்கெட் பால் கொண்டு வந்து இறக்கும் வேன்களுக்கு வாடகை இரண்டு மாதமாக தரவில்லை என்பதால் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணையில் துணை பொது மேலாளர் மருத்துவர் நாகராஜ் தலைமையில் வேன் ஓட்டுநர்கள் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மாலை முதல் பால் விநியோகம் செய்யப்படும் என வேன் உரிமையாளர்கள் பேச்சு வார்த்தையில் அதிகாரிகளிடம் உத்தரவாதம் அளித்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். முதல் 15 நாள் கூறிய பணம் 11 மணியளவில் கொடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். 4500 பிடித்தம் செய்யப்பட்ட பணமும் அனைவருக்கும் கொடுக்கப்படும் என அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டுள்ளனர். நாளை முதல் 4500 மீண்டும் பிடித்தம் செய்யப்பட்டால் போராட்டம் மீண்டும் துவக்கப்படும் என ஆவின் பால் விநியோகம் செய்யும் வேன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவின் துணை பொதுமேலாளர் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது..... வேன் ஓட்டுநர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். இன்று ஒரு பில் நாளை ஒரு பில் தொகை வழங்கப்படும். 46 வேன்கள் மூலம் காலை ஆவின் பால் வினியோகத்திற்க்கு பயன்படுத்தப்படுகின்றன. ரூ.27 லட்சம் (15 நாட்கள் பில் ) இன்று காலை கொடுக்கப்படும். நாளை ரூ 27 லட்சம் மீத தொகை கொடுக்கப்படும் என்றார்.

காலை திடீரென வேன் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது. மாலை பால் விநியோகம் சீராக இருக்கும் என துணை பொது மேலாளர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision