ஒன்றிய அரசை கண்டித்து இளைஞர் அணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து இளைஞர் அணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர இளைஞரணி சார்பில் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஒன்றிய அரசானது தமிழகத்தை பல்வேறு வழிகளில் வஞ்சித்து வருகிறது மேலும் இதற்கு எடுத்துக்காட்டாக தமிழக பள்ளி மாணவர்களை வஞ்சிக்கும் விதமாக கல்வியில் இந்தியை மூன்றாவது மொழியாக இணைக்க கோரி மும்மொழி என்று நிர்பந்திப்பது, அப்படி மும்மொழியாக அறிவித்தால்தான் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியும் என தமிழக அரசை மிரட்டுவது

மேலும் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவது பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் அநீதியை இழைப்பது என பல்வேறு அநீதிகளில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் சின்ன கடை வீதி பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்து தீபக் தலைமை வகித்தார்

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் வரவேற்றார் மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளர் எஸ்.கே.பி. கர்ணா மாநகரக் கழகச் செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன் தலைமைக் கழக இளம் பேச்சாளர்  விஜயலட்சுமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் கூட்டத்தின் நிறைவாக பகுதி கழக இளைஞரணி அமைப்பாளர் மாரிகண்ணன் நன்றியுரை ஆற்றினார் 

இக்கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் மூக்கன் லீலாவேலு மாநகரக் கழக நிர்வாகிகள் நூர்கான் சந்திரமோகன் சரோஜினி பகுதிகழகச் செயலாளர்கள் மோகன் பாபு விஜயகுமார் மற்றும் இளைஞர் அணி மாவட்ட மாநகர பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision