ரெட்பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு-க்கு போலீஸ் கஸ்டடி
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை அடுத்து 10ம்தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட வரப்பட்டார்.
பின்னர் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயசுதா முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு பின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்புடைய வழக்கில் ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு பிணை (பெயில்) குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. இதில் பெலிக்ஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு வழங்கினர். இதனை விசாரித்த நீதிபதி போலீஸ் காவலில் ஒருநாள் விசாரிக்க அனுமதி வழங்கி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision