காணாமல் போன பெண் கல்குவாரியில் சடலமாக மீட்பு – கொலையா? தற்கொலையா?

காணாமல் போன பெண் கல்குவாரியில் சடலமாக மீட்பு – கொலையா? தற்கொலையா?

இதோ வந்து விடுகிறேன் என கூறிவிட்டு சென்றதாக அவருடைய தாய் கதறி அழுகிறார்!

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் செட்டியபட்டி ஆர்சி நகரைச் சிதம்பரம் – விக்டோரியா தம்பதியினரின் மகள் அமலா. அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அமலாவிற்கும் திருமணம் ஆகி 1 வருடம் ஆன நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக கணவருடன் பிரச்சினை ஏற்பட்டது பின்பு ஆர்.சி. நகரில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அமலா தன் அம்மாவிடம் வந்துவிடுகிறேன் என சொல்லி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடி பார்த்த பிறகு அமலாவின் தாய் விக்டோரியா எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் நேற்று 27 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று செட்டியப்பட்டியில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள கல்குவாரி குளத்தில் ஒரு பெண் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் நிகழ்விடத்திற்க்கு வந்து கல்குவாரியில் சடலமாக கிடந்த இளம்பெண்ணை மீட்டனர்.

பின்னர் காணாமல் போனதாக புகார் அளித்த அமலாவின் தாய் நேரில் வந்து அடையாளம் உறுதி செய்யப்பட்டதையெடுத்து சடலமாக கிடந்தது அமலா என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அமலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கல்குவாரியில் சடலமாக கிடந்த அமலா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் மணிகன்டன் தலைமறைவு போலீசார் தேடி வருகின்றனர்.