பூங்காக்களை பராமரிக்க தன்னார்வலர்களுக்கு திருச்சி ஆணையர் அழைப்பு!!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, பொன்மலைக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீரூற்றுகளை தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள்,வங்கிகள், அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் மூலம் தங்களது சொந்த பொறுப்பில் பராமரிக்க ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, பொன்மலைக் கோட்டம், வார்டு எண் - 44 , 46 47 மற்றும் 48க்குட்பட்ட பகுதிகளில் நீரூற்றுகளுடன் பூங்காக்கள் 1.காமராஜர் சிலை ரவுண்டானா மத்திய பேருந்து நிலையம், 2.சோனா மீனா தியேட்டர் எதிர்புறம், வில்லியம்ஸ் ரோடு, 3.நேரு சிலை, வில்லியம்ஸ் ரோடு, 4.VGP பூங்கா, முத்தரையர் சிலை ரவுண்டானா அருகில், பாரதிதாசன் சாலை, 5.MGR சிலை ரவுண்டானா, பாரதிதாசன் சாலை, 6.வெள்ளி விழா ஆண்டு பூங்கா, நியூராஜா காலனி, 7.பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்கா, பாரதிதாசன் சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நீரூற்றுடன் கூடிய பூங்காக்களை பராமரிக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வங்கிகள், அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தங்களது சொந்த பொறுப்பில் அழகுற பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை அனுகலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.