சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 20 நாட்களில் ரூபாய் 1.78 கோடி உண்டியல் காணிக்கை!!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 20 நாட்களில் ரூபாய் 1.78 கோடி உண்டியல் காணிக்கை!!

Advertisement

Advertisement

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம்.

Advertisement

அந்தவகையில் திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கடந்த 20 நாட்களில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 3 கிலோ 182 கிராம் தங்கம், 4 கிலோ 840 கிராம் வெள்ளியும், ரூபாய் 1 கோடியே 78 லட்சத்து 04 ஆயிரத்து 873 ரொக்கம் மற்றும் 60 அயல்நாட்டு கரன்சிகள் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் தெரிவித்தார்.

Advertisement

இதனை கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர்.