தேசிய கல்லூரியில் விளையாட்டு துறையின் 10ம் ஆண்டு விழா

தேசிய கல்லூரியில் விளையாட்டு துறையின் 10ம் ஆண்டு விழா

திருச்சி தேசிய கல்லூரியில் விளையாட்டு துறையின் பத்தாம் ஆண்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது . இவ்விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார் . இந்நிகழ்வில் சிறப்பு குழந்தைகள் உள்பட விளையாட்டில் சாதித்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவின் முக்கியத்துவமாக சிந்தியா என்ற விருதுநகர் குக்கிராமத்தை இருந்த மாணவி அமெரிக்கா செல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளதை அமைச்சர் மிகவும் பாராட்டினார். அந்த மாணவிக்கு அமெரிக்கா அமைப்பானது 5 லட்சம் வரையிலான ஊக்கத்தொகையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது .
விழாவில் கல்லூரி செயலர் ரகுநாதன், முதல்வர் சுந்தரராமன், பாரதியார் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஸ்ரீனிவாச ராகவன் மற்றும் பேராசிரிய பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் தேசிய கல்லுரியில் ஆராய்ச்சி துறையில் தன்னுடைய ஆராச்சியை பயின்று வருகிறார். இக்கல்லூரியில் பயிலுவதை பெருமையாக கருதுகிறேன் என்று அவரது சிறப்புரையில் ஆற்றினார். விழாவின் ஏற்பாட்டை துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி ஒருங்கிணைத்தார். Dr. பூபதி விழாவிற்கு நன்றி உரை கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO