14 நாட்கள் திருச்சியில் தவித்த 179 மலேசிய தமிழர்கள்!! தனிநபராக தன்னுடைய சொந்த செலவில் விமானம் மூலம் மீட்டவர்!!

14 நாட்கள் திருச்சியில் தவித்த 179 மலேசிய தமிழர்கள்!! தனிநபராக தன்னுடைய சொந்த செலவில் விமானம் மூலம் மீட்டவர்!!

“அந்த மனசு தான் சார் கடவுள்” என்னும் அன்பே சிவம் திரைப்படத்தின் வசனம் போல கொரோனா வைரஸை தடுப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு உள்ளங்கள் பல உதவிகள் செய்துதான் வருகின்றன. பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா தடுப்பு பணிக்காக டாட்டா குழுமம், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் என தொடர்ந்து ஒரு காவலர் தன்னுடைய 15 நாள் சம்பளத்தை வழங்கியது வரை பல்வேறு நிதி உதவிகள் பொதுமக்கள் சார்பில் இந்த கொரோனோவிற்காக வழங்கப்பட்டுதான் வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் வேறு நாடுகளிலும் மாநிலங்களிலும் இந்த 144 தடை உத்தரவின் மூலம் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர்.இந்நிலையில் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த மலேசிய தமிழர்கள் 14 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் தவித்து வந்துள்ளனர்.

அவர்களுக்கு உதவும் விதமாக முதல் கட்டமாக மலேசியா டத்தோ பிரதீஷ் குமார் அவர்கள் சொந்த செலவில் மலேசியா அரசு மூலம் விமானத்தை அனுப்பி வைத்தார்.

மலேசியா டத்தோ பிரதீஷ் குமார்

தனி ஒரு நபராக இருந்து தன்னுடைய சொந்த செலவில் மலேசியத் தமிழர்களை மீட்பது என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

தற்போது திருச்சி விமான நிலையத்தில் இருந்து 179 பயணிகளுடன் மலேசிய விமானம் புறப்பட்டது. மேலும் நாளை மற்றும் 4ம் தேதி இரண்டு அவசரகால மீட்பு விமான சேவையும் திருச்சியிலிருந்து இயங்கப்பட உள்ளது.