அம்மா இரு சக்கர வாகன திட்ட பயனாளிகளின் வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு:

அம்மா இரு சக்கர வாகன திட்ட பயனாளிகளின் வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு:

பணியாற்றும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகனம் திட்ட பயனாளிகளின் வயது வரம்பு 40 லிருந்து 45 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.தமிழகத்தில் அம்மா இருசக்கர வாகன வழங்கும் திட்டம் பணியாற்றும் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டது.

தற்போது அதன் பயனாளிகள் தளர்வை கொண்டு வந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவிக்கையில் தமிழகத்தில் வசிக்கும் 18 முதல் 40 வயது என்ற முன்பிருந்த விதி தளர்த்தப்பட்டு 45 வயது உடையவராக இருக்க வேண்டும் என்று மாற்றப்படுகிறது. பயனாளி எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி இருக்க வேண்டும் என்று பிரிவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.

இனி 45 வயது வரையுள்ள பணியாற்றும் பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் வாங்கமுடியும்.