திருச்சி மாநகராட்சி அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வண்ணம்:

திருச்சி மாநகராட்சி அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வண்ணம்:

அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநகராட்சி பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணம் அடிக்க வேண்டும்.மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் உத்தரவு.

திருச்சி மாநகராட்சியின் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் 74 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் பேசிய திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி பள்ளிகளில்
கழிவறை வசதி, குடிநீர் வசதி, சத்துணவு கட்டிடம், உணவு கூடம், சுற்றுசுவர் வர்ணம் பூசும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும், குடிநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியை கல்வி நிதியின் கீழ் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும் திருச்சியில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் ஒரே நிறத்தில் வர்ணம் பூச வேண்டும் என்று தெரிவித்தார்.