கராத்தே மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து

கராத்தே மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து


         கராத்தே புடோகான் இன்டர்நேஷனல் நடத்திய 20வது தேசிய கராத்தே போட்டி கோயமுத்தூரில் டிசம்பர் மாதம் 23, 24 ,25  ஆகிய தேதிகளில் நடந்தது. இப்போட்டியை தமிழ்நாடு புடோகான் தலைவர் S.V.S. முருகேஷ் அவர்கள் மற்றும் ஆசியாவின் தலைவர் B. பரமேஷ் அவர்களும் தலைமை தாங்கி  நடத்தினார்கள். இந்த தேசிய போட்டியில் ஒடிசா ,வெஸ்ட் பெங்கால், தெலுங்கானா ,ஹைதராபாத், கர்நாடகா, கேரளா ஜார்கண்ட் ,ஜம்மு காஷ்மீர் போன்ற பல்வேறு மாநிலங்களை  சேர்ந்த 1800 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். இதில் தமிழ்நாடு திருச்சி ஜாக்கி புடோகான் கராத்தே பள்ளியின்   வீரர் வீராங்கனைகள் கலந்து  கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்களை வென்று குவித்தனர்.


கத்தா, கும்மிட்டே ,டீம் கட்டா, டீம் கும்மிட்டே  பிரிவில்  17 தங்கப்பதக்கமும், 17 வெள்ளிப் பதக்கமும், 23 வெண்கல பதக்கங்களை  வென்றார்கள்.

இதில் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் ஒட்டுமொத்த கிராண்ட் சேம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்கள்
மாணவர்களை திருச்சியில் இருந்து கோயமுத்தூர் தேசிய போட்டிக்கு திருச்சி ஜாக்கி புடோகான் கராத்தே பள்ளியின் பயிற்சியாளர்கள்
 ரென்ஷி ஜாக்கி S.M. ராஜ் முகமது, சென்சாய் ஷாஜகான் வழி நடத்திச் சென்று போட்டியை உடனிருந்து மிக சிறப்பாக நடத்தினார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO