திருட்டு, கொள்ளை வழக்குகளில் ரூ.3.5லட்சம் மதிப்பிலான நகை,பணம் மீட்பு- 21 ரவுடிகள் அதிரடி கைது
திருச்சி மாநகரத்தில், கடந்த (15.03.2023)-ந்தேதி முதல் கடந்த ஒரு வார காலமாக கண்டோன்மெண்ட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் பறிக்கப்பட்டதாக 3 வழக்களும், 2 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டதாக 1 வழக்கு உட்பட 4 வழக்குகளும், ஸ்ரீரங்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் பறிக்கப்பட்டதாக 3 வழக்குகளும், கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் பறிக்கப்பட்டதாக 1 வழக்கு மற்றும் பணம் ரூ.1000/- பறிக்கப்பட்டதாக 1 வழக்கும், இ.புதூர் காவல் இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக 2 வழக்குகளும், பாலக்கரை காவல் மூன்று சக்கர வாகன ஆட்டோ திருடுபோனது தொடர்பாக 1 வழக்கும், அரசு மருத்துவமனை காவல் செல்போன் பறிக்கப்பட்டதாக 1 வழக்கும், உறையூர் காவல் கேஸ் சிலிண்டர் திருடுபோனதாக 1 வழக்கு உட்பட மொத்தம் 15 வழக்குகள் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் எதிரிகளை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் விபரங்களை சேகரித்தும், சம்மந்தப்பட்ட பகுதிகளில் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் மேற்படி வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஒரு இளங்குற்றவாளிகள் உட்பட, 21 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும் வழக்கின் சொத்தான 8 செல்போன்கள், பணம் ரூ.2,500/-, 2 சவரன் தங்க நகை, 2 இருசக்கர வாகனம், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் ஒரு கேஸ் சிலிண்டர் என மொத்தம் ரூ.3,50,000/- மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரிகளை கைது செய்தும், வழக்கின் சொத்துக்களை மீட்ட காவல் அதிகாரிகள், தனிப்படையினர் மற்றும் புலன்விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டியும், இதுபோன்ற வழக்குகளில் அதிரடி நடவடிக்கை தொடரும் என தெரிவித்துக்கொண்டார்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn