பிகில் படத்தின் 25-வது நாள் : திருச்சியில் கொண்டாட்டம்:

பிகில் படத்தின் 25-வது நாள் : திருச்சியில் கொண்டாட்டம்:

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே”
என்ற பாடல் வரிகளில் வருவதை போலவே… திருச்சி உறையூர் மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கால்பந்து வீராங்கனைகளில் ஊக்குவிக்கும் வகையில் கால்பந்து மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் திருச்சி விஜய் மக்கள் மன்ற தலைவர் R.K. ராஜா மற்றும் ஒன்ஸ்மோர் குரூப் தலைவர் கண்ணன், பாஷா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து R.k.ராஜா அவர்கள் கூறுகையில்..
“பிகில் திரைப்படத்தின் 25-வது நாளை முன்னிட்டு மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் பிரிவிலிருந்து மாவட்ட அளவில் செல்ல இருக்கும் மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கால்பந்து ஆட்டத்திற்குரிய சீருடைகள் வழங்கப்பட்டது”. என்று குறிப்பிட்டுள்ளார்.