திருச்சி தனியார் டயர் கம்பெனியில் தீ விபத்து:

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் தீ விபத்து:

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் தீ விபத்து அதிகாலையில் ஏற்பட்டது.6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் தீ விபத்து. 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த தீ விபத்தால் திருச்சி – சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலை கரும் புகை மூட்டம் காணப்படுகிறது.இதனால்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த உதயன், திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோருக்கு சொந்தமானது இந்த டயர் கம்பெனி.10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் 3 மணி நேரத்திற்கு மேலாக  தீயணைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சம்பவ இடத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துணை இயக்குனர் மீனாட்சி தீயணைப்பு பணிகளை துரிதப்படுத்தினார்.மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ யும், புகையும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது