விழாக்கோலம் பூண்ட வேட்புமனுத்தாக்கல்:திருச்சி திருவெறும்பூரில் கோலாகலம்:

விழாக்கோலம் பூண்ட வேட்புமனுத்தாக்கல்:திருச்சி திருவெறும்பூரில் கோலாகலம்:

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று திருவெறும்பூரில் வெங்காய மாலையுடன் வேட்பு மனு, கை குழந்தையுடன் வேட்பு மனு என வேட்பாளர்கள் வேட்பு மனு செய்தனர்.கடைசி நாளில் விழாக்கோலம் கண்டது திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம்.

திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் ஒரே நேரத்தில் ஒன்றிய அலுவலகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைப் பெறுகிறது

அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதியான இன்று நிறைவடைந்தது.முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட  கட்சிகள் இன்று போட்டி போட்டுக் கொண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

அவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்த வந்தப்போது வேட்பாளர்கள் மேளதாளங்கள் முழங்கவும், இரு சக்கர வாகனங்களில் பேரணியாக வந்தனர். மேலும் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கு அதன் ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் உற்சாகபடுத்தினர்.  இதில் ஒரு திமுக வேட்பாளர் கங்காதரன் கழுத்தில் அணிந்து கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் அதிமுக பெண் வேட்பாளர்  தனது கைகுழந்தையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டதால் வேட்பு மனு செய்ய வந்தவர்களுக்கும் போலீசாருக்கு சிறு தள்ளுமுள்ளு நடைபெற்றது. அமமுகவினர் சிலர் தாங்கள் கொண்டு வந்த கொடியை அப்படியே விட்டு சென்றதால் குப்பையில் கிடந்தன.

வேட்பு மனு தாக்கல் இறுதி நாளான இன்று அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகளும் ஒரே இடத்தில் திரண்டதால் திருவெறும்பூர் ஒன்றிய விழாக்கோலம் பூண்டதுடன்  திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.