திருச்சி அருகே மின்சாரம் தாக்கி 3 கறவை மாடுகள் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் தற்பொழுது விவசாய பணிகள் தற்போது தொடக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் மேய்ச்சலுக்கு விளை நிலங்களில் மாடுகள் அவிழ்த்து விடப்படும்
அப்படி கூத்தைப்பாரை சேர்ந்த சேகர் ( 53 ) என்பவருக்கு சொந்தமான கறவை மாடுகளில் பால் கறந்து வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு சீமை கறவை மாடுகளும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஒரு கறவை மாடும் மேச்சலுக்கு சென்றுள்ளது.
அப்படி சென்ற மாடுகள் வீடு திரும்பவில்லை. மேலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த மின்சார கம்பிகள் கீழே அறுந்து கிடப்பது தெரியாமல் மூன்று கறவை மாடுகளும் கம்பியில் உரசி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மூன்று கறவை மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து மாட்டை தேடி மாட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்த பொழுது தான் மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் உடனடியாக அப்பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்வாரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் அந்த பகுதியில் சம்பா ஒருபோக நடவு பயிருக்காக நாற்றங்கால்கள் உழவு ஒட்டி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தற்போது விவசாயப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், விவசாயிகள் சென்று வரும் வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த மின்கம்பி அருந்து விழுந்ததில் விவசாயிகள் எந்தவித அசம்பாவிதமும் தப்பி உள்ளனர். இறந்து போன கறவை மாடு தலா 75 ஆயிரம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.