சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ய தடையில்லை - ஆனால் விதிமுறைகளை மீற கூடாது - மாவட்ட தேர்தல் அலுவலர்

சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ய தடையில்லை - ஆனால் விதிமுறைகளை மீற கூடாது - மாவட்ட தேர்தல் அலுவலர்

திருச்சி மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிளுக்கு அனுப்பப்பட உள்ளது. முன்னதாக் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று திறந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலையில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியினை தொடக்கி வைத்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு.... நாளைய தினம் எந்தஎந்த வாக்குச்சாவடிக்கு எந்த வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்படுகிறது என்பது குறித்து தேர்வு செய்யப்படும்.

1262 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் குறித்த தகவல்கள் வேட்பாளர்களிடம் வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 5,200 தகுதி வாய்ந்த தபால் ஓட்டுகளில், நகர்ப்புறங்களில் 3450பேருக்கு தபால் ஓட்டு அளிக்க  வினியோகிக்கப் பட்டு அதில் 2600 பேரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. 
சமூகவலைத்தளங்களின் பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடு இல்லை, டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதேநேரம் சமூக வலைதளங்களில் பிரச்சாரங்களில் விதிமுறை மீறல் இருக்ககூடாது. 

வெளி அரங்கில் பிரச்சாரம் செய்யவும், உள்ளரங்கில் அனுமதிக்கப்பட்ட அளவில் பாதி நபர்களுடன் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் 2 வார்டுகளில் மட்டும் 16 வேட்பாளர்கள் உள்ளதால் 2 பேலட் யூனிட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை, விதிமுறை மீறல் இருந்தால் அழிக்கப்படும் மேலும் தொடர்புடைய வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn