வகுப்பறையில் சீலிங் பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம் - ஆய்வு செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்த எஸ்.பி

வகுப்பறையில் சீலிங் பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம் - ஆய்வு செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்த எஸ்.பி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் திருச்சி மட்டுமல்லாது சுற்று வட்ட மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் தினமும் வீட்டில் இருந்தும் அங்கு உள்ள விடுதியில் தங்கியும் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளி ஒரு வகுப்பிற்கு மாதிரி தேர்வு நடைபெற்று வருவதால் 9ம் வகுப்பு மாணவர்களை ஒரே வகுப்பறையில் அமர வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த வகுப்பறையில் இருந்த மேற்கூரை பெயர் விழுந்துள்ளது.

அப்பொழுது மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததால் அந்த மின்விசிறியில் விழுத்த கற்கள் தெறித்தது. இதில் துவாக்குடியை சேர்ந்த பாண்டி மகன் நிரஞ்சன், லாவண்யா சேரன், தர்ஷன் ஆகிய 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் உடனடியாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், வட்டாச்சியர் ஜெயபிரகாஷ்சம் ஆகியோர் சிதிலம் அடைந்த வகுப்பறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து சிதிலம் அடைந்த கட்டிடத்தை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு தொடரப்படும் என்று பள்ளி நிர்வாகத்திடம் திருச்சி எஸ்பி வருண்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision