திருச்சி மாநகரில் ரூ.4.70கோடி அபராத தொகையாக வசூல் - மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகரில் ரூ.4.70கோடி அபராத தொகையாக வசூல் - மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தின் 
காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் 
ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு சரகம், போக்குவரத்து காவல் உதவி 
ஆணையர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.

மேலும் காவல் ஆணையர் அவர்களின் மேலான உத்தரவின்பேரில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விபத்துக்களை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறுகளை சீர்செய்யவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதின் பேரில், 2022-ம் ஆண்டில் கடந்த 4 மாதங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த 1,99,977 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு; ரூ.1,99,97,700/- தொகையும், காரில் சீட் பெல்ட் அணியாமலும் வந்த 15,236 நபர்கள் மீது ரூ.15,23,600/- அபராத தொகையும்,

மது அருந்திவிட்டு வாகனம் வாகனம் ஓட்டிச் சென்ற 2,293 நபர்கள் மீது ரூ.22,93,000/- தொகையும், அதிவேகமாக அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி வந்த 1,144 நபர்கள் மீது ரூ.3,43,200/- தொகையும், செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் வாகனம் ஓட்டி சென்ற 6,311 நபர்கள் ரூ.6,31,100/- தொகையும், சிக்னல் விதியை மீறிய 13,874 நபர்கள் ரூ.13,87,400/- தொகையும் ஆக கடந்த நான்கே மாதங்களில் போக்குவரத்து விதியை மீறிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டி 3,83,024 நபர்கள் மீது ரூ.4 கோடியே 70 லட்சம் அபாரத தொகை வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகன விபத்துக்ளையும், போக்குவரத்து இடையூறுகளையும் தடுக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின்
காரணமாக கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், 
போக்குவரத்து இடையூறின்றி சீரக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என 
திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO