திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த 45 லட்சம் மதிப்புள்ள தங்கம்

திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த 45 லட்சம் மதிப்புள்ள தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று வெளிநாடுகளிலிருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.

இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையில் திருச்சி விமான நிலைய கழிவறையில் கருப்பு நிறத் கவர் கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கழிவறைக்குச் சென்று சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கவரை கைப்பற்றி பிரித்து பார்த்ததில் 900 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது.

இதன் மதிப்பு 45 லட்சம் என கூறப்படுகிறது. துபாயிலிருந்து விமானத்தில் வந்த ஒரு பயணி தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம், அதிகாரியின் சோதனைக்கு பயந்து அதனை கழிவறையில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn