திருச்சி மாநகராட்சியின் 5 திமுக மண்டல தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது . இதில் திமுக கூட்டணி 59 இடங்களை கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இடங்களில் அதிமுக மூன்று இடங்களையும், சுயச்சை இரண்டு இடங்களையும், ஒரு அமமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர மேயராக அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார். (33 வார்டு ) திவ்யா திருச்சி மாநகராட்சி துணை மேயர். ஆனால் முதல் முறையாக திருச்சி மாநகராட்சியில் திமுக மேயர் துணை மேயர் பதவிகளை கைப்பற்றியது.
65 வார்டுக்கு உட்பட்ட பகுதியை ஏற்கனவே நான்கு கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. தற்போது ஐந்தாவதாக ஒரு புதிய மண்டலம் உருவாக்கபட்டுள்ளது. ஒவ்வொரு கோட்டத்திற்கும் 13-வார்டுகளாக பிரிக்கபட்டு அதற்கான கோட்ட தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். முன்பு நான்கு கோட்டத்திற்க்கு பெயர் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 5 மண்டலங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இன்று திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கோட்டத் தலைவர் தேர்தல் நடைபெற்றது இத்தேர்தலை திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் நடத்தினார் முறையாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வேறு எவரும் போட்டியிடாத நிலையில் 5 மண்டல தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆணையர் அறிவித்தார்.
1 வது மண்டல தலைவராக ஆண்டாள் ராம்குமார் , இரண்டாவது மண்டல தலைவர் ஜெயநிர்மலாவும் மூன்றாவது மண்டல தலைவராக மதிவாணனும், நான்காவது மண்டல தலைவராக துர்காதேவியும் 5வது மண்டல தலைவராக விஜயலட்சுமி கண்ணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
மண்டலத் தலைவர் தேர்தல் நடைபெறுவதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..