திருச்சியில் 595 கிலோ தேயிலை தூள், 18 கிலோ கலப்பட பொருட்கள் பறிமுதல்
பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து கீழபுலிவர் ரோட்டில் உள்ள தேயிலை தூள் விற்பனை செய்யும் ஒருவர் வீட்டில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது சுமார் 595 கிலோ டீ தூளும், அதில் சாயம் ஏற்றுவதற்காக வைத்திருந்த 18 கிலோ கலப்பட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடுப்பதற்காக 4 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 595 கிலோ டீ தூளையும் மற்றும் 18 கிலோ கலப்பட பொருட்களையும் உணவு பகுபாய்வு அறிக்கை வரும்வரை அவரது வீட்டிலையே ஒரு அறையில் சீல் செய்து Surity Bond போடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் உணவு வணிகர்களும் இது போன்று கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோகூடாது என்றும், இதுபோன்ற கலப்படம் கண்டறிந்தால் கீழே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். இதில் இந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டி, இப்ராஹிம், அன்புச்செல்வன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn