திருச்சியில் போதை ஊசிகள், மாத்திரைகள், கஞ்சா விற்ற 7 பேர் கைது

திருச்சியில் போதை ஊசிகள், மாத்திரைகள், கஞ்சா விற்ற 7 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் கோட்டை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மதுரை ரோடு ஜீவா நகர் பின்புறம் ரயில்வே கேட் அருகில் உள்ள பகுதியில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள், கஞ்சா விற்பது குறித்து வந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது, அங்கு இருந்த குமார், ராம்நாத், நந்தகுமார், பாலாஜி, பிரகாஷ், குமார் என்கிற குமரேசன், ஆகிய 6 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் மருத்துவர்களின் சீட்டு இன்றி விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட 23,100 Nitravet மாத்திரைகள்,  Nitrosun மாத்திரைகள் 300, Tydel மாத்திரை 50 ஆகிய மாத்திரைகளை ஆகிய மாத்திரைகளை போதை மருந்தாக மாற்றி பயன்படுத்தி வந்ததும், இவற்றை பிற இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் Mephentermime Sulphate - 1 Battle, ஊசிகள் 10 விற்பனைக்காக 5 கிலோ கஞ்சாவை வைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் சக்திதாசன் என்பவரின் மனைவி சித்ராதேவி பெயரில் ஸ்ரீ பார்மசி என்ற மொத்த மருந்து விநியோகம் செய்யும் உரிமை எடுத்து தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து கடையை மூடிவிட்டு அதே உரிமத்தை வைத்து கள்ளத்தனமாக திருப்பூரில் உள்ள மருந்து கடை மூலமாக மேற்படி எதிரியுடன் சேர்ந்து வாங்கி இளைஞர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் சந்தை மதிப்புள்ள போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள், ஊசிகள், 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களும், 6 செல்போன்களும் கைப்பற்றப்பட்டது. இதன்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையின்படி திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு மேற்பார்வையில் போதை மாத்திரைகள் கஞ்சா விற்பனை செய்து வந்த முக்கிய எதிரிகளை கைது செய்த தனிப்படை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்

தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள மருந்து கடைகளில் உரிய மருந்து சீட்டு இல்லாமல் மேற்கண்ட மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது அவ்வாறு மருந்து சீட்டு இன்றி மருந்துகள் விற்பனை செய்தால் மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் மருந்தகம் உரிமை ரத்து செய்யப்படும் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0