திருச்சியில் ரூபாய் 79 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத் தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமாங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் சமீப காலாமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடு களில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரி களும், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு 3 விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
8 பயணிகளிடம் விசாரணை அப்போது சந்தேகத்திற்கிட மான வகையில் இருந்த அழைத்து சென்று அவர் களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து ரூ. 79.12 லட்சம் மதிப்பிலான 1,338 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இந்த தங்கத்தை கொண்டு வந்தவர்கள் வாசனை திரவிய பாட்டில் மற்றும் பெண்களுக்கான கைப்பை ஆகியவற்றில் மறைத்து தகடு் வடிவிலும், குச்சி வடிவிலும் எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision