சிறைக்கு மதுபோதையில் வந்த கைதி மீது வழக்கு

சிறைக்கு மதுபோதையில் வந்த கைதி மீது வழக்கு

திருச்சி மத்திய சிறையில் ஒரு வழக்கு தொடர்பாக சாகுல்ஹ மீது (வயது 40) என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 10-ந்தேதி நாகை செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் இவரை அழைத்து சென்றனர்.

அங்கு கோர்ட்டில் ஆஜர் ஆகிவிட்டு திருச்சி மத்திய சிறைக்கு மீண்டும் அவர் அழைத்துவரப்பட்டார். அப்போது மத்திய சிறை மெயின் கேட்டில் சாகுல் அமீதை சிறைத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி சண்முகசுந்தரம் அளித்த புகாரின் பேரில் சாகுல்ஹமீது மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி வருகிறனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn