முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் நியூட்டன் குளிர்மை அரங்கில் முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா சிந்தனைப் பேச்சாளர் எம்.சுஜித் குமார் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் எக்ஸ். சுசன் கிறிஸ்டினா வரவேற்புரை நல்கினார். வரவேற்புரையில் மாணவர்கள் அனைவரும் நன்கு படித்து தேர்ச்சி பெற்று பட்டங்களை பெறவேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.

கணிதப்பேராசிரியை முனைவர் கே.ஹேமா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சுஜித் குமார் ஏ.வி.பி. மற்றும் ஹச்ஆர் வணிகத்தலைவர், இன்போ சிஸ் லிமிடெட், நிறுவனர் மற்றும் நிருவாக அறங்காவலர், மாற்றம் அறக்கட்டளை சென்னை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘கல்வியின் ஆற்றல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில் மாணவர்கள் தங்களின் கல்லூரிக் கல்வியில் உண்மையான கதாயநாயகர்களாவும், முதுகெலும்பாகவும் இருக்கும் பெற்றோரை மதிக்குமாறு கேட்டுக்கொண்டார். மாணவர்கள் எதைப்படித்தாலும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தங்களின் பலத்தை அறிந்த நல்ல உள்ளங்களுடன் நட்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தங்களின் பொன்னான நேரத்தை விரையம் செய்யும் சமூக ஊடகங்களில் இருந்து மாணவர்கள் தங்களை ஒதுங்கி இருக்குமாறு வலியுறுத்தி பிரச்சனைகளைத் தீர்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாக அனைத்து மாணவர்களும் மாற வேண்டும் என வாழ்த்தி முதலாமாண்டு வகுப்புகளை தொடக்கி வைத்தார்.

மாஸ்டர் கல்விக்குழுமத்தின் நிருவாக இயக்குநர் முனைவர் எம்.ஏ மாலுக் முகமது தலைமை ஏற்று நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களிடத்தில் திறன்களை வளர்த்துக்கொள்ள கேட்டுக்கொண்டார். மேலும் மாணவ மாணவிகளின் வினாக்களுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். இக்குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பாத்திமா பதூல் மாலுக் தங்களின் வாழ்த்துரையில் பேராசிரியர்களின் கைப்பிடித்து மாணவர்கள் நடந்தால் வாழ்வில் மென்மேலும் சிறக்க வழி அமைத்துக் கொடுப்போம் என உறுதியாளித்தார்.

இந்நிகழ்வில் மாஸ்டர் கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் பி. முருகானந்தம், கல்விப்புலத்தலைவர் முனைவர் எஸ். ராஜசேகரன், நிர்வாகவியல் பள்ளி இயக்குநர் முனைவர் எம். ஹேமலதா மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள். அறிவியல் மானுடவியல் துறைத்தலைவர் முனைவர் என். சைவராசு நன்றியுரையாற்றினார். முதலாமாண்டு பேராசிரியர்கள் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision