ஒயிட் பெட்ரோல் ஏற்றிவந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ஒயிட் பெட்ரோல் ஏற்றிவந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஒயிட் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே சென்ற வாகனத்தின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததாக தெரிகிறது.அப்போது டேங்கர் லாரி டிரைவர் விபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் பிரேக் பிடிக்கவே நிலைத்தடுமாரிய லாரி சாலையில் உருண்டோடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த ரமேஷ் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இருப்பினும் இந்த விபத்தினால் டேங்கர் லாரி சேதமடைந்து ஒயிட் பெட்ரோல் எரிபொருளானது வெளியேறியது.இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் டேங்கர் லாரி தீப்பிடிக்காத வண்ணம் அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததை தொடர்ந்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் போலீசார் டேங்க் லாரியை அப்புறப்படுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision