சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த உறவினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பங்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையினை திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் எடுத்து வருகிறார்கள்.
கடந்த (17.03.2024)-ந் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம், ராமமூர்த்தி நகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்து 10 வயது சிறுமியை, சிறுமியின் உறவினர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த (19.03.2024)-ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணையில், எதிரி வல்லரசு (20) த/பெ.முருகன் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் எதிரி வல்லரசு என்பவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரி வல்லரசு மீதான குண்டர் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு, இன்று (24.04.2024) குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision