கழிவுகள் சேரும் இடமாக மாறிய வரும் சின்ன ஏரி
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியானது 1970 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இங்கு சுமார் 8,674 குடும்பங்கள் வசிக்கின்றன. இவைகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது துறையூர் சின்ன ஏரி நீர்.
தற்போது சின்ன ஏரியில் மொத்த ஊரின் கழிவுகள் சேரும் இடமாக நகராட்சி நிர்வாகம் ஆக்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் அமிலத்தன்மை கொண்டு மாசு அடைந்துள்ளது. இங்கு இயங்கி வரும் கடைகளில் உள்ள கோழி இறைச்சி கழிவு மற்றும் இதர கடைகளில் இருந்துவரும் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதாலும்,
துறையூர் பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளின் கழிவுகளும் ஏரியில் கொட்டப்படுவதால் ஏரி நீர் மாசு படிந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
ஏரியில் உள்ள உயிர் வாழினங்களான மீன் போன்றவை காத்திடவும், மேலும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏதும் பரவாமல் இருப்பதற்காக உடனடியாக ஏரிக்கரைகள் இருபுறமும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள், நீரில் மிதக்கும்
பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn