பாஜகவும், காங்கிரசும் ஒன்றுதான் - திருச்சியில் அமைச்சர் உதயநிதி பேட்டி

பாஜகவும், காங்கிரசும் ஒன்றுதான் - திருச்சியில் அமைச்சர் உதயநிதி பேட்டி

எங்கள் முதல்வர், எங்கள் பெருமை " என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சி கடந்த 23 ஆம் தேதி திருச்சியில் தொடங்கியது. கண்காட்சியின் நிறைவு நாளான இன்று தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுடன் இணைந்து கண்காட்சியினை பார்வையிட்டார்.

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினது மகனும், தமிழ்த் திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளருமாகவும் உள்ளார். அவர் இன்று, திருச்சி தூய வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரி மைதானத்தில் கடந்த 8நாட்களாக நடைபெற்றுவரும் கண்காட்சியினை பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வதுபிறந்த நாளை கொண்டாடும் வகையிலான இக்கண்காட்சியினை, திமுக வின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உதயநிதியுடன் இணைந்து பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது....இந்த புகைப்படக் கண்காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கின்றன. உழைப்பு என்றால் மு.க.ஸ்டாலின் என தலைவர் கலைஞர் கூறியுள்ளார். அதனை எடுத்துக் காட்டுவதாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

மத்திய பாஜக அரசு வருமான வரி சோதனை நடத்துவதற்கும், காங்கிரஸ் கட்சி மிசா வை கொண்டு வந்ததற்கும், எதாவது வேறுபாடு உண்டா? என்ற கேள்விக்கு...எந்த வேறுபாடும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn