குழுமாயி அம்மன் கோயில் குட்டி குடி திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்

குழுமாயி அம்மன் கோயில் குட்டி குடி திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்

திருச்சி புத்தூர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறுகண் பாலம் அருகே குழுமாயி அம்மன் மலை கோவில் உள்ளது. சோழர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி மாநகர காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து மறு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் இரவு காளி அவிட்டம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. கடந்த புதன்கிழமை சுத்த பூஜை நடைபெற்றது. இதனையெடுத்து முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் மருளாளி மந்தையின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆட்டு குட்டி வழங்கப்பட்டது. பின்னர் முறைப்படி மங்காபுரம் பண்ணையார்கள் வழங்கப்பட்டு பொதுமக்கள் ஆடுகள் நேர்த்தி கடன் கொடுக்கப்பட்டது இதற்காக ஏராளமான பொதுமக்கள் என்று குழுமாயி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.

கோடைகாலம் என்பதால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் குறிப்பாக உறையூர் சின்ன செட்டி தெருவைச் சேர்ந்தவர் பாபு. இல்லாமியரான இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 9 வருடங்களாக குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழாவின் போது பொதுமக்களுக்கு, பக்தர்களுக்கும் அன்னதானம் செய்தார்.

சாதி, மதம் பாகுபாடின்றி மத நல்லிணக்கத்தோடு இந்துக்கள் நடத்தும் திருவிழாவில் இவர் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்து வருகிறார். இவருடைய நண்பர்கள் உதவியோடு 9வது வருடமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானம் பெற்று சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO