திருச்சி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

 உலகத் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இன்று ( 2.8.2022)திருச்சி உறையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளின் மூலமாக தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு கர்ப்பிணி தாய்மார்களிடையே ஏற்படுத்தினர்.

திருச்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) மருத்துவர். ஜா. ஷர்மிளி பிரிசில்லா கலாமணி தலைமை தாங்கினார். மருத்துவர். பக்ருதீன் முன்னிலை வகித்தார்.கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் முதலில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் மூலமாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தாய்ப்பால் கொடுப்பதனால் மார்பக புற்றுநோய் , ரத்த சோகை ஏற்படாது போன்ற தாய்ப்பாலின் நன்மைகளை விளக்கி பாடினர்.

மேலும் தொலைக்காட்சி பெட்டி மாதிரி செய்யப்பட்டு அதில் தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறைகள் தொடர் நாடக வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்கள் தாய்ப்பால் குறித்து கேட்ட சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் பதில் அளித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு பால்,கடலை மிட்டாய், பேரிச்சம்பழம், உலர் திராட்சை, பாதாம் உள்ளிட்ட ஆரோக்கியமான சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில் கர்ப்பிணி தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்போம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO